முக்கிய செய்தி! லண்டனில் பரபரப்பு! பயங்கரவாத சம்பவத்தின் பின்னர் லண்டனில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
லண்டன்-இங்கிலாந்- வாகனம் ஒன்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் பாதசாரிகளை அறுத்த சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இது ஒர பேரழிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட நால்வர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே சமயத்தில் கத்தியுடன் தாக்குபவர் ஒருவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளியே பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தியுள்ளான். இதனை தொடர்ந்து அப்பகுதி கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டது.
இச்சம்பவங்களை ஒரு பயங்கரவாத நடடிவடிக்கை போன்று கையாள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ரீதியிலான பயங்கரவாத அச்சுறுத்தல் யு.கேயில் ஏற்கனவே மிக கடுமையானதென பட்டியலிடப்பட்டது.
பிரசெல்ஸ் விமான நிலையம் மற்றும் நிலக்கீழ் ரயில் பாதைகளில் 32பேர்கள் வரை கொல்லப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளின் ஆண்டு நிறைவு புதன்கிழமையாகும்.
பாராளுமன்ற கட்டிடத்திற்குள் இருந்து பிரதம மந்திரி திரேசா மே வெகு விரைவாக வெளியேற்றப்பட்டார்.
பாடசாலை சுற்றுலாவில் லண்டன் சென்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.