மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்காது – அனுரகுமார எம்.பி
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், யுத்த அழிவை சந்தித்துள்ள வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர்கள் மாத்திரமே விடுதலைப் புலிகளின் மீள்வருகை குறித்து பேசுகின்றனர்.
எனினும், அதற்கான சாத்தியகூறுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றது. வடக்கில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்துவதற்கான எண்ணம் ராஜபக்ச குழுவினருக்கு இருந்தாலும், தமிழ் மக்களுக்கு இல்லை.
இதேவேளை, வடக்கையும் தெற்கையும் பிரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியும், தமிழர் தரப்பிலுள்ள இனவாதிகளுமே முயற்சி செய்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.