யாழ். கொக்குவிலில் மீண்டும் வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பிறவுண் வீதிக்கு கூரிய வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழு அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் மீது பெற்றோல் குண்டினை வீசி விட்டு வர்த்தக நிலையத்திற்குள் உட்புகுந்துள்ளனர்.
இதன் போது குறித்த குழுவினர் மேற்படி வர்த்தக நிலைய உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர்.
பெற்றோல் குண்டு வீச்சு மற்றும் வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதல் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.