வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். ‘ஏகே 61’ எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் பைக்குடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அஜித் தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ளதாகவும் அங்கு பைக் ரேசர் குழுவுடன் அவர் பைக் ரைடு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.