அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரித்தானியா வீராங்கனை ஜோஹன்னா கோன்டா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் பிரித்தானியா வீராங்கனை கோன்டா, டென்மார்க் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி இருவரும் மோதினர்.
இதில் கோன்டா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதன் மூலம் 25 வயதான கோன்டா உலக தரவரிசையில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2015ம் ஆண்டு 124வது இடத்தில் இருந்தார்.
அதுமட்டுமின்றி, 40 வருடங்களுக்கு பின்னர் டென்னிஸில் ஒரு பிரித்தானியா வீராங்னை பெறும் பெரிய சாம்பியன் பட்டமாக இது அமைந்துள்ளது.
கடந்த 1977ம் ஆண்டு பிரித்தானியா வீராங்னை Virginia Wade விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.