கல்கிசை பிரதேசத்தில் மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்க கடந்த 09ம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அக்மீமன தயாரத்ன தேரருக்கு மாத்திரம் நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.