இன்றைய நவீன உலகில் நேரடியான பணப்பரிமாற்றத்தை விட இலத்திரனியல் பணப்பரிமாற்றமே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
இதில் மாஸ்டர் கார்ட் முறையும் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும்.
இதன் ஊடாக பணம் செலுத்தும்போது சில நாடுகளில் கையெழுத்து இடவேண்டிய அவசிம் காணப்படும்.
அவ்வாறே வேறு சில நாடுகளில் இரகசியக் குறியீட்டு இலக்கம் அல்லது NFC முறை என்பன பாதுகாப்பின் பொருட்டு பயன்படுத்தப்படும்.
ஆனால் விரைவில் இவற்றுக்கு பதிலாக பயோமெட்டிக் செக்கியூரிட்டி பயன்படுத்தப்படவுள்ளது.
அதாவது கைவிரல் அடையாளத்தினை ஸ்கான் செய்யக்கூடிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
மாஸ்டர் கார்ட் ஆனது முதன் முதலாக பரீட்சார்த்த ரீதியில் தென்னாபிரிக்காவில் இத் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
வெற்றியளிக்கும் பட்சத்தில் அடுத்ததாக ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்யவுள்ளது.