மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் நினைவுகூரல்!
யாழில். இரண்டு இடங்களில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (27) காலை 9 மணியளவில் திலீபனின் நினைவிடம் முன்பாக நினைவுகூரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோப்பாய் மாவீரர் மயானம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மாவீரர் மயானம் முன்பாக மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.