மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆராய்ச்சி: ரூ.4 கோடி நிதி திரட்டிய பொதுமக்கள்
கனடா நாட்டில் மார்பக புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள அந்நாட்டை சேர்ந்த பொதுமக்கள் இதுவரை ரூ.4 கோடி நிதியை திரட்டி அசத்தியுள்ளனர்.
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் காரணமாக ஒவ்வொரு வருடமும் கனடாவில் சுமார் 5,000 பெண்கள் பலியாகின்றனர்.
இந்த நோயை தடுக்கும் விதத்தில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசும் தனியார் நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த ஆராய்ச்சிக்கு தேவையான நிதியை ஒவ்வொரு மாகாண பொதுமக்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள லண்டன் நகரில் நேற்று ஓட்டப்பந்திய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
விக்டோரியா பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
’Run for the Cure’ எனப்பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி மூலம் 2,80,000 டொலர்(4,08,24,000 இலங்கை ரூபாய்) வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்நிகழ்ச்சி மூலம் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி மூலம் 20 மில்லியன் டொலருக்கும் அதிகமாக நிதி திரட்டப்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.