காவற்துறை வீரன் ஒருவரைச்சுட முயன்ற இiளுஞன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்;. இந்தச் சம்பவம் மார்செய்யில் உள்ள «Au son des guitares» களியாட்ட விடுதிக்கு முன்னால் நடந்துள்ளது. இது ஒரு பயங்கரவாதத் தாக்குதாக இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்று அதிகாலை மார்செய்யின் Opera பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட காவற்துறை வீரன் கடமையிலோ அல்லது சீருடையிலோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த களியாட்ட விடுதிக்குள் அதிகாலை 4h30 அளவில், இந்த இளைஞன் நுழைய முற்பட்டபோது தடுக்கப்பட்டுளளார். அங்கு சேவையில் இல்லாத காவற்துறை வீரன், இந்த இளைஞனைத் தடுத்த பாதுகாப்பு அதிகாரியின் உதவிக்கு வந்து இந்த இளைஞனைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
உடனடியாகத் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த இளைஞன் தன்னைத் தடுத்தவர்கள் இருவரையும் சுட முயன்றுள்ளார். உடனடியாக சீருடையில் இல்லாத காவற்துறை அதிகாரி அவனைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
கொல்லப்பட்ட இளைஞனிடம் துப்பாக்கியும் 20 ரவைக்கூடுகள் நிரம்பிய ரவைகளும் இருந்துள்ளன. இவர் உள்ளே சென்றிருந்தால் பெரும் விபரீதமோ, அங்கிருந்தவர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலோ நடந்திருக்கும் என்றும், அது வாசலிலேயே தடுக்கப்பட்டுள்ளது என்றும் மார்செய்யின் அரசப் பரிதிநிதி நீதிபதி Xavier Tarabeux தெரிவித்துள்ளார்.