மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL): எட்டு அணிகள் இறுதி நான்கு இடங்களுக்காக பலப்பரீட்சை
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் PLAY-OFF சுற்றுப்போட்டிகள் செப்டெம்பர் மாதம் 3ம், 4ம், மற்றும் 5ம் (September 3rd, 4th and 5th) திகதிகளில் ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடைபெறவுள்ளமை யாவரும் அறிந்ததே.
இன்னும் சில போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இம்முறை ஒருபோதும் இல்லாதவாறு 12 அணிகள் முதல் எட்டு இடங்களுக்கான தெரிவில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இப்பன்னிரண்டு அணிகளில் சென்ற ஆண்டு அரையிறுதிப்போட்டிக்குள் நுழைந்த Youngstars CC, சென்ற ஆண்டு முதலாம் இடத்தை தட்டிச்சென்ற Toronto Blues CC, சென்ற ஆண்டு Super League Challenge Trophy போட்டித்தொடரை வெற்றிபெற்ற Cougars CC மற்றும் B-Town Boyz CC ஆகிய நான்கு அணிகள் ஏற்கனவே PLAYOFF போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டன.
இப்போட்டித்தொடரின் இறுதி லீக்(league) போட்டிகள் வரும் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(August 14th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வரும் 14ம் திகதி நடைபெறும் போட்டிகள் 2013ம் ஆண்டின் வெற்றியாளர்கள் Atlas-A CC, மற்றும் 2014ம் ஆண்டின் வெற்றியாளர்கள் BlueBirds CC ஆகிய அணிகளுக்கு மிகவும் முக்கியமானதாக அமைவதோடு Cheetahs CC, Chola CC, Sauga Boyz CC, Eelam Kings CC, BNS CC மற்றும் GPS CC ஆகிய அணிகளின் PLAYOFF வாய்ப்புக்களை தீர்மானிப்பதிலும் பெரும்பங்கு வகிக்க போகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.
கீழ் காணப்படும் போட்டிகள் எந்தெந்த அணிகள் PLAYOFF-க்குள் நுழையும் என்பதை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கப்போகின்ற போட்டிகளாகும்.
GPS CC vs Western CC
NCC vs Sauga Boyz CC
YoungStars CC vs Sauga Boyz CC
NCC vs Blue Birds CC
BNS CC vs Chola CC
Atlas A CC vs B-Town Boyz CC
YoungStars CC vs Blue Birds CC
BNS CC vs Cheetahs CC
வரும் 14ம் திகதி எந்தெந்த அணிகள் PLAYOFFக்கு தெரிவாக்கப்போகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அதுவரை ரசிகர்களாகிய நாங்கள் காத்திருக்கவேண்டியதே ஒரேவழி.
இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்குகிறது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் [email protected] மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.