மார்க்கம் நகரில் கத்திக்குத்து
மார்க்கம் நகரின் Thornhill பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் 17 வயதானவர்கள் எனவும், இவர்கள் தாமாகவே பொலிஸில் சரணைந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டதாகவும் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் இந்த இருவரின் ஒளிப்படங்களை கடந்த புதன்கிழமை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே அவர்கள் இருவரும் பொலிஸாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் 17வயது சிறுவன் ஒருவரே கத்திக்குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு உயிராபத்தான காயங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த இந்த இருவரும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பதனால் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.