இன்று இடம்பெற்ற மார்க்கம்-தோன்கில் இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.
கனடிய லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேரி இங் என்பவரே வெற்றி பெற்றார். இன்று கனடாவில் இடம்பெற்ற ஐந்து இடைத்தேர்தலிகளில் ஒன்றாகவே இதுவும் இடம்பெற்றது.
ஆளும்கட்சியில் அங்கம் வகித்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியிலிருந்து விலகி அவர்களிற்கான தெரிவாக இந்தத் தேர்தல் இடம்பெற்றது.
வீழ்ந்த வாக்குக்களில் 52 விழுக்காட்டைப் பெற்று மேரி இங் அவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றார்.
கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தை அடுத்த இடத்தைப் பிடித்த கட்சிக்குக் கொடுத்திருந்தது. கடந்த தேர்தல்களில் இத் தேர்தலையும் விட நெருக்கமான போட்டி நிலவியது.
இதன் பிரகாரம் மார்க்கம்-தோன்கில் தொகுதிக்கு என இடம்பெற்ற இந்தத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு தொடர்பான சர்ச்சைகள் ஆரம்பத்தில் கிளம்பியிருந்தன.
இருந்த போதும் கனடியப் பிரதமரின் அலுவலகத்தில் பதவி வகித்த மேரி இங் போட்டியின்றி இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.
இதற்கான பிற்புலக் காரணமாக சீனர்கள் அதிகம் வாழும் இந்தத் தொகுதியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனக் கனடியர்களற்கான அங்கீரகத்தை வழங்குவதாகவே கருதப்பட்டது.
குறிப்பாக தற்போது லிபரல் கட்சியிலுள்ள ஒரேயொரு சீனப் பாராளுமன்ற உறுப்பினராக ஆர்னோல்ட் சான் புற்றுநோய்கக்கான சிகிச்சை காரணமாக மருத்துவிடுப்பில் இருப்பதால், மேரி இங் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என்று கருதப்பட்டது.
குறி;ப்பாக இந்தியர்கள் நால்வர் அமைச்சர்களாக உள்ளதுடன், ஒரு சோமலியர், ஒரு ஆப்கானியர் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர்.
ஆனால் சனத்தொகையில் ஆங்கிலக் கனடியர்களிற்கு மற்றும் பிரெஞ்சுக் கனடியர்களிற்கு அடுத்த தொகையிலுள்ள சீனக் கனடியர்கள் மத்தியிலிருந்து ஒருவர் அமைசசராக்கப்படாதது குறையாகக் காணப்பட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதுபோலவே தமிழர்களின் சாhபாக ஹரி ஆனந்தசங்கரிக்கும் ஒரு தகுதியான பொறுப்பு வழங்க வேண்டிய தேவையையும் இந்தத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.
கனடியப் பிரதமர் தமிழ் ஊடகமொன்றிக்கு வழங்கிய பேட்டி கூட இந்த விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்தியதாகக் கருதப்பட்டது. தமிழர்களின் பிரதேங்களிலும் லிபரல் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றிருந்தது.
மார்க்கம் தோன்ஹில் இடைத்தேர்தலில் இரண்டாமிடத்தில் ராகவன்பரஞ்சோதி
கனடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் மேரி 2355 இற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி இரண்டாமிடத்தைப் பிடித்தார்.
இறுதிக்கட்ட வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், லிபரல் கட்சி வேட்பாளர் 9856 வாக்குகளையும், ராகவன் பரஞ்சோதி 7501 வாக்குகளையும் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள