மார்க்கம் தோன்கில் கண்சவேட்டிவ் வேட்பாளர் தெரிவிற்கான தேர்தல் – லோகன் கணபதி வெற்றி
திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டிருந்த எதிர்பார்ப்புக்களையும், எதிர்மறைப் பிரச்சாரங்களையும் முறியடித்து மார்க்கம் தோன்கில் தொகுதியின் மாகாண கண்சவேட்டிவ் வேட்பாளராக லோகண் கணபதி அவர்கள் தெரிவானார்.
லோகண் கணபதிக்கு எதிரான போட்டியில் ஒன்றாரியோ மாகாணக் கண்சவேட்டிவ் கட்சியின் செயலாளரான (Secretary General of Ontario Progressive Party) ஜிம் குவான் என்பவரும், ஒன்றாரியோ மாகாணக் கட்சியின் ஒரு துணை அங்கமான பிசி பண்ட் என்கிற நிதியத்தின் பொருளாளர் (Treasurer, PC Fund, Progressive Party of Ontario) நிமலராஜ் விநாயகமூர்த்தியும் போட்டியிட்டிருந்தனர்.
2018ல் தேர்தல் இடம்பெறும் போது போட்டியிடும் வேட்பாளர் தற்போது அந்தத் தொகுதிக்கான மாகணசபை உறுப்பினராக இருக்கும் மைக்கல் சான் என்பவரை தோற்கடிக்கக்கூடிய தகுதிநிலையுடையவராக இருந்தல் வேண்டும் என்ற அடிப்படையில் லோகன் கணபதி அவர்களால் மாத்திரமே இந்தத் தொகுதியை வெல்லமுடியும் என்ற நிலை இருந்தது.
குறிப்பாக சுமார் 7 ஆயிரம் வாக்குக்களால் இதுவரை காலமும் வெற்றி பெற்று வரும் மைக்கல் சான் என்பவரை வெற்றி கொள்ள இந்தத் தொகுதியில் அதிக ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடிய நபர் கண்சவேட்டிவ் கட்சியில் போட்டியிடுவதே அவர்கள் இந்த் தொகுதியை வெல்ல உதவும்.
இந்த வகையில் கடந்த மூன்று மாநகரத் தேர்தல்களிலும் வென்று தனக்கென ஒரு வாக்கு வங்கியை வைத்திருக்கும் லோகன் கணபதி அவர்கள் அதற்கான சிறந்த தேர்வாக அமைந்திருந்தார் என்பதும், அதற்கான ஆதரவை தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தின் மீது அக்கறையுள்ள அமைப்புக்களும் தலைவர்களும் ஆதரித்தனர் என்பதும் நோக்கத் தக்கது.
இதேவேளை இது ஒரு உட்கட்சித் தேர்தல் என்ற உண்மையைத் தவிர்த்து லோகன் கணபதி மீதான காழ்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒரு வேட்பாளர், கட்சியின் தலைவர் திரு.பற்றிக் பிறவுன் அவர்களை வசைபாடும் ஒரு அணியை தனக்கான அணியாக உருவாக்கி பிரச்சாரத்தை மேற்கொண்டது அவரது நேர்மைத் தன்மையைக் கேள்விக்குரியாக்கியது.
இந்தத் உள்ளகத் தேர்தலில் திரு, லோகன் கணபதி வெற்றால் கண்சவேட்டிவ் கட்சியின் “நடைமுறைச் சாத்தியமுள்ள பழைமைவாதம்” Pragmatic Conservatism என்ற கொள்கை மீது பிடிப்புக் கொண்டு இதர கட்சிகளிலுள்ள தமிழர்கள் கண்சவேட்டிவ் கட்சியில் சேரலாம் என்ற பயத்தில்,
லிபரல் கட்சியைச் சேர்ந்தோர் லோகன் கணபதியை தோற்கடிப்பதற்கான துருப்புச் சீட்டாக மற்றதொரு வேட்பாளரைப் பாவித்திருந்த போதும் அது வெற்றி பெறவில்லையென்பதும் சில ஊடக உரிமையாளகள் தங்களிற்கு ஆதரவுப் புலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையில் நேரடியாகக் களமிறங்கியிருந்தாலும் அவர்களது வேண்டுகோளிற்கு மக்கள் ஒரு விழுக்காடும் ஆதரவு தெரிவிக்கவில்லையென்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
1,009 total views, 729 views today
– See more at: http://www.canadamirror.com/canada/76534.html#sthash.UcSDg5wx.dpuf