லண்டனில் நடந்த மாராத்தான் போட்டியில் ஓடிக்கொண்டிருந்த வீரர் திடீரென்று நின்று தனது தோழியிடம் காதலை சொன்ன விதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரித்தானியாவின் Manchester பகுதியைச் சேர்ந்தவர் Jon Higgins. இவர் லண்டனில் நடந்த 26.2 மைல் மாராத்தான் போட்டியில் கலந்து கொண்டார்.
போட்டியில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார். அப்போது 24-வது மைலை அடைந்தவுடன் திடீரென்று நின்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கிருந்த நேரத்தில் பெண் ஒருவரிடம் தனது காதலை கூறி, தன் கையில் இருந்த ஒன்றை கழற்றி அவரிடம் கொடுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண், அதன் பின் Jon Higgins காதலை ஏற்றுக்கொண்டார். காதலை ஏற்றுக்கொண்ட பெண் Jon Higgins-ன் நெருங்கிய தோழி என்றும் இருவரும் நான்கு வருடங்களாக நண்பர்களாக இருந்தவர்கள் என்பது தெரியவந்தது.