மாகாபாவின் கடலை வேகுமா?
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துவருகிறது.
தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி இளம்நாயகனாக வலம் வருகிறார். இவரது பாணியை பின்பற்றும் மாகாபா ஆனந்த் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் இரண்டாவது நாயகனாக அறிமுகமானார்.
அதன்பின்பு நடித்து நவரசநாயகன், அட்டி படங்கள் போதிய வரவேற்பை பெறாதநிலையில் தற்போது கடலை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஜான்விஜய், யோகி பாபு, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர்.
நிலத்தில் விளையும் கடலையை விட காதலர்களின் கடலை தான் பேமஸ், இதை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் அமைந்துள்ளது.
advertisement