மஹிந்தவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரணில்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டதால் இலங்கைக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பிரதமர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்,
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமை 500 மில்லியன் மக்கள் கொண்ட பாரிய சந்தையை கைப்பற்ற உதவியாக அமையும் என்று கூறியுள்ளார்.
மேலும், 2003 ஆம் ஆண்டு இலங்கை 2,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றிருந்தது.
ஆனால் 2015 ஆம் ஆண்டில், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்த நிலையில், 4,800 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றிருந்தது.
இருப்பினும், அதே வருடம் பங்களாதேஷ் வரிச்சலுகையை தனியாக அனுபவித்ததுடன், 26,000 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றுக்கொண்டது.
அந்த நாட்டுக்கு பணப் பிரச்சினை இல்லை.ஆனால் எமக்கு உள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.