மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சனையில் சுஷீல் குமாருக்கு தொடர்பா ?
இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சனையில் சுஷீல் குமாருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா வை சேந்த மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ்,அடுத்த மாதம் நடக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 74 கிலோ பிரிஸ்டைல் மல்யுத்த பிரிவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஊக்க மருந்து சோதணையில் தடை செய்யப்பட்ட ஸ்டிராய்டு மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது.
மேலும் அவருக்கு பி மாதிரி சோதனை நடத்தப்பட்டு அதிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது.
இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நர்சிங் யாதவ் கூறியதாவது: நான் எப்போதும் தடை செய்யப்பட்ட பொருகளை சாப்பிட்டது இல்லை.எனக்கு எதிராக சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நர்சிங் யாதவ் ஒழுக்கமானவர் என்றும் அவருக்கு எதிராக சதி நடந்திருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
சுஷீல்குமாருக்கு தொடர்பு
இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரரான சுஷில்குமார் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.மேலும் அவர் இந்தியாவுக்காக இரண்டு முறை பதக்கங்களை வென்றுள்ளேன்.
ஆகவே ரியோ வில் நடக்கும் 74 கிலோ எடை மல்யுத்த பிரிவில் தான் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் நீதிமன்றத்திலோ நர்சிங் யாதவ்க்கு தீர்ப்பு சாதக மாக வந்தது.இதனால் இப்பிரச்சனையின் பிண்ணனியில் சுஷில் குமார் இருக்கலாம் என கூறுகின்றனர்.
நர்சிங் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்ப்டட நிலையில் மாற்று வீரராக சுஷீல் குமார் அனுப்புவதற்கு வாய்பில்லை எனவும் அதற்கான கால கெடு முடிந்து விட்டதாக இந்திய ஒலிம்பிக் பொது செயலாளர் ராஜீவ் மேத்தா கூறீயுள்ளார்.