மல்யுத்த வீரரை மணக்கிறார் “பதக்க நாயகி” சாக்ஷி மாலிக்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், சக மல்யுத்த வீரரை மணக்கவுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாக்ஷி மாலிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
அடுத்து டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் எப்படியும் தங்கம் வென்று விட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் சாக்ஷி. இந்த நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.
தனது எதிர்கால கணவரின் பெயரை குறிப்பிட மறுத்த சாக்ஷி கூறுகையில், என்னை திருமணம் செய்யவுள்ளவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்.
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவை நனவாக்க உதவி புரிவார். திருமணத்திற்கு பிறகும் போட்டிகளில் பங்கேற்க எனக்கு உதவுவார் என்று கூறியுள்ளார்.