மலிங்காவின் சாதனையை ஊதித் தள்ளிய அவுஸ்திரேலிய வீரர்
தென் ஆப்பிரிக்கா அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த ஆட்டத்தின் முதல் ஓவரை அவுஸ்திரேலியா வீரர் மிட்சல் ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரின் நான்காவது பந்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஸ்டீபன் குக்கை வீழ்த்தினர்.
இதன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முதல் ஓவரிலே 19 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளின் முதல் ஓவரில் 11 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டிகளில் 7 விக்கெட்டும், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா 14 இன்னிங்சில் 7 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் டாவல்ட் (7), இங்கிலாந்தின் டேவிட் வில்லி (7), தமிங்க பிரசாத் (7) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.