மற்றுமொரு சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு ஆயத்தமாகின்றது ரொறொன்ரோ!
கனடா-ரொறொன்ரோ நகரின் உயர்மட்ட மருத்துவர்கள் இன்னுமொரு வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளார்.மற்றுமொரு சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு ஆயத்தமாகுமாறு அந்த எச்சரிக்கை கூறுகின்றது.
வியாழக்கிழமை அதிஉயர்வாக 33 C காணப்படும் ஆனால் ஈரப்பதனுடன் கூடி 38ஆக உணரப்படும்.
வெள்ளிக்கிழமை கோடைகாலத்தின் மிகவும் வெப்பமான நாட்களில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.அதிஉயர் வெப்பநிலையாக 34 C காணப்படுவதுடன் ஈரப்பதனுடன் கூடியதாக 43-ற்கு கிட்ட உணரப்படும்.
சனிக்கிழமை 33 C. ஆகும்.
கனடா சுற்றுச்சூழல் பிரிவினர் வெப்ப எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
ரொறொன்ரோவின் சுகாதார பதில் மருத்துவ அதிகாரி Dr. Barbara Yaffe, ,நாட்பட்ட நோய்வாயப் பட்டவர்கள், வரையறுக்கப்பட்ட இயக்கம் உடையவர்கள், மழலைகள் மற்றும் சிறுவர்கள், வீடற்றவர்களை கண்காணிக்குமாறு அவரவர் குடும்பத்தவர்களிற்கும் நண்பர்களிற்கும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அதிக அளவு தண்ணீர் குடிக்குமாறும், குளிரூட்டப்பட்ட இடங்களில் தங்குமாறும், தொய்வான மெல்லிய நிற ஆடைகளை அணியுமாறும் ,வெளிக்கள நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் கூறியுள்ளார்.
அது மட்டுமன்றி பிள்ளைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வெப்பமான வாகனஙகளிற்குள் விட்டுச்செல்ல வேண்டாம் எனவும எச்சரித்துள்ளார்.