மருத்துவ மனைவியை கொலை செய்த நரம்பியல் அறுவை மருத்துவர்.?
கனடா-ரொறொன்ரோவை சேர்ந்த நரம்பியல் அறுவை மருத்தவர் அவரது மருத்துவ மனைவியை கொலை செய்ததற்காக மறியலில் வைக்கப்பட்டார்.
சனிக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட இவரது வழக்கு டிசம்பர் 20வரை தள்ளிப்போடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இந்நபர் லேக்க்ஷோர் கிழக்கு மற்றும் நெடுஞ்சாலை 10மிசிசாகாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் காப்பி கடை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரது மனைவியான எலெனா விறிக் ஷாம் ஜியின் உடல் கிளெயின்பேர்க், வாஹன் பகுதியில் சூட்கேஸ் ஒன்றிற்குள் இருக்க வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
40-வயதுடைய ஷாம்ஜி நோத்யோர்க்கிலுள்ள அவரது வீட்டில் புதன்கிழமை இரவிற்கும் வியாழக்கிழமை காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என துப்பறியும் சார்ஜன்ட் Steve Ryan தெரிவித்தார். நெரிக்கப்பட்டு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணம் சம்பவித்துள்ளது. 40-வயதுடைய டாக்டரான எலெனா விறிக் ஷாம்ஜி ஸ்காபுரோ வைத்தியசாலையில் குடும்ப வைத்தியராக பணியாற்றினார்.
இத்தம்பதிகளிற்கு மூன்று பிள்ளைகள்.
இக்கொலை அதிர்ச்சி மற்றும் கவலை நிறைந்த மனித கொலை என பல்கலைக்கழக சுகாதார நெட்வேர்க் பேச்சாளர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான மொகமட் ஷாம்ஜி ரொறொன்ரோ வெஸ்ரேன் வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை வைத்திராக பணிபுரிந்தவர். அது மட்டுமன்றி ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் பணிபுரந்தார்.
இவருக்கு ரொறொன்ரோ சிறுவர் வைத்தியசாலையில் ஆராய்ச்சி ஆய்வகம் ஒன்றும் இருந்ததாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
கொன்றவரும் கொல்லப்பட்டவரும் சமூகத்தில் அத்தகைய மதிப்பிற்குரிய வைத்தியர்கள் என றயன் தெரிவித்தார்.