மரபணுக் குறியீடுகளை மாற்றியமைப்பதில் வெற்றியை நோக்கி விஞ்ஞானிகள்
இவை DNA எனப்படும் பதார்த்தத்திலே காணப்படுகின்றது.
வழமையாக பெற்றோர்களிலிருந்து சில இயல்புகள் இம் மரபணுக் குறியீட்டின் ஊடாக பிள்ளைகளுக்கு கடத்தப்படும்.
ஆனால் அவ்வாறு கடத்தப்படும் இயல்புகளில் மாற்றம் செய்வதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் முழு முயற்சியுடன் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கான ஆராய்ச்சிகள் E.coli எனப்படும் பக்டீரியாவை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றில் காணப்படும் 62,214 வரையான பரம்பரை அலகுகளை மாற்றீடு செய்வதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ள அதேவேளை ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் வெற்றியும் கிட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச் செயன்முறையில் DNA இன் தொழிற்பாடு பற்றி முறையாக அறிந்திருக்க வேண்டும் எனவும், பின்னர் A, T, C, மற்றும் G ஆகிய மூலச் சோடிகளை RNA இற்கு மொழிபெயர்க்க வேண்டும் எனவும் இக் குழுவில் பணியாற்றும் Peter Carr என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இம் முயற்சி முழுமையாக வெற்றியளிக்கும் பட்சத்தில் மனிதர்களின் இயல்புகளை இலகுவாக மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.