மயிரிழையில் உயிர்தப்பிய முச்சத நாயகன் கருண் நாயர்! உங்களுக்கு இந்த விபரீத கதை தெரியுமா?
இந்திய வீரர் கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசி வரலாறு படைத்துள்ளார்.
இதன் மூலம் ஷேவாக்கிற்கு பிறகு முச்சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு கருண் நாயருக்கு நடந்த ஒரு விபரீத சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
அதாவது கேரளாவில் உள்ள பம்பா ஆற்றில் தவறி விழுந்த கருண் நாயர் நூலிழையில் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
கடந்த யூலை மாதம் 17ம் திகதி கோவில் திருவிழாவுக்காக கருண் நாயர் கேரளாவுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு அனைவரும் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பம்பா ஆற்றில் படகு கோவிலை நெருங்கும் போது எதிர்பாராத விதமாக படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. கருண் நாயர் உட்பட பலர் ஆற்றில் தத்தளித்துள்ளனர்.
இதில் மோசமான விடயம் என்னவென்றால் கருண் நாயருக்கு நீச்சல் தெரியாது. பின்னர் உடனே மீட்பு படகு வந்து அனைவரையும் காப்பாற்றியுள்ளது.
இந்த விடயத்தை முன்னாள் இந்திய தலைவரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அப்போது மீட்பு படகு அவரை காப்பாற்றவில்லை என்றால் இப்போது இப்படி ஒரு சாதனை நிகழ்வு நடந்திருக்காது என்று ரவி சாஸ்திரி குறிப்பிட்டார்.