மன்னார்குடி கோஷ்டியுடன் மோதல்! சசிகலா பற்றிய உண்மையை உடைக்கும் எடப்பாடி பழனிச்சாமி?
மன்னார்குடி கோஷ்டியால் தொடர் அவமானங்களுக்கு ஆளாகி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களுக்கு எதிராக மாறலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சசிகலா அணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரனால் அவர் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
இரு தினங்களுக்கு முன்னர் திருநின்றவூரில் அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள எடப்பாடி, தினகரன் ஆகியோர் வந்தனர். அங்கு இருந்த வரவேற்பு பேனர்களில் எடப்பாடி புகைப்படங்கள் இல்லை.
தினகரனுடையது மட்டுமே இருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி கவனிக்கப்படாமால் டம்மி செய்யப்பட்டார்.
தொடர் அவமானத்தால் கோபத்தில் இருக்கும் எடப்பாடி, ஓ.பி.எஸ் பாணியில் தியானத்தில் அமர்ந்து சசிகலா பற்றி உண்மையை விரைவில் உடைப்பார் என கூறப்படுகிறது.