மனித உரிமை தினத்தில் ஓங்கி ஒலித்த அவலக் குரல்கள்
சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று நேற்று(10) நடைபெற்றுள்ளது.
குறித்த பேரணியில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் என பலர் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எனது மகன் உதயணன் ரமேஸ் 21 வயத்தில் 1992 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் 2016.03.12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையிருந்து நீதிமன்றம் ஒன்றுக்கு சிறைச்சாலை பேருந்து ஒன்றில் வந்து இறங்கிய காட்சியை தொலைக்காட்சி செய்தி ஒன்றில் பார்த்தேன். தற்போது எனது மகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதாக உணருகின்றேன்.
தற்போது நான் வறுமையிலுள்ளேன் எனக்கு எதுவித உதவிகளும் கிடையாது எனது மகரைப் பார்ப்பதற்குக்கூட வசதியில்லாமல் உள்ளது எனவே எனது மகனை விடுதலை செய்யுமாறு வேண்டுகின்றேன். என மட்டக்களப்பு 11 ஆம் குறுக்கைச் சேர்ந்த 64 வயதுடைய இ.விமலாசினி கூறியுள்ளார்.
இதேவேளை, எனது 2 அண்ணாமாரும், ஒரு தம்பியுமாக 3 பேர் எனது குடும்பத்தில் காணாமல் போயுள்ளார்கள். ஒரு அண்ணா இரண்டு கால்களும் இயங்காத நிலைலயில், மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு முன்னால் தேங்காய் வியாபாராம் செய்து கொண்டிருந்தார்.
கடந்த 1992.03.12 ஆம் தகதி ராசிக் குறுப் என்ற குழுவினர் தான் எனது அண்ணாவை பிடித்துக் கொண்டு சென்றதாகத்தான் நாங்கள் அறிந்தோம் 21 வயதில் காணாமல் போனார் இதுவரையில் எனது அண்ணாவைக் காணவில்லை. உயிருடன் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? என்ற தகவலும் எமக்குத் தெரியாமல் அலைந்து திரிகின்றோம்.
இதேபோன்று தான் எனது ஏனைய 2 சகோதரர்களும், 1992 ஆம் ஆண்டுதான் காணாமல் போயுள்ளார்கள்.
எங்கு கேட்டாலும், எனது சகோதரர்கள் பற்றிய தகவல் இல்லை என்று தான் தெரிவிக்கின்றார்கள், எனது சகோதரர்கள் காணாமல் போனதிலிருந்து தினமும் அழுது
அழு துஎங்கள் அம்மா நோயாளியாகிவிட்டார். எனவே எங்கிருந்தாலும் எனது சகோதரர்களைத் தேடித்தரவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. என மட்டக்களப்பைச் சேர்ந்த மேரி மெடோன அறித்துள்ளார்.
சிறுவயத்தில் தந்தையை இழந்தத்தினால் உழைத்து குடும்பத்தைப் பார்க்க வேண்டிய பொறுப்பு எனது மகனுக்கு ஏற்பட்டது. பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டு விட்டு கூலி வேலைகளை எனது மகன் செய்து கொண்டு எனது குடும்பத்தைப் பார்த்து வந்தான் இந்நிலையில் விடுதலைப் புலிகள் எனது மகனைக் 2001ஆம் ஆண்டு கடத்தி விட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் எதுவித தொடர்பும் இல்லை 2 வருடங்கள் கழிந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் எனது மகள் உள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது. ஆனால் மகனை நேரில் சென்று பார்த்ததில்லை. மகனின் தொடர்பு இன்றுவரை கிடையாது தவிக்கின்றோம். எங்கிருக்கின்றார் என்ற தகவலும் எமக்குத் தெரியாதுள்ளது. இன்னும் எனக்கு 4 பிள்ளைகள் உள்ளார்கள் கணவனையும் இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த எனது மகனைத் தேடித்தாருங்கள்.
எனது குடும்பத்திற்கு ஆதாரம் வழங்குவதற்குக்கூட யாரும் இதுவரையில் முன்வரவில்லை. அரசாங்கமும் எதுவித உதவிகளையும், எமக்கு மேற்கொள்ளவில்லை. மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த சி.செல்வி குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கறுவாக்கேணியில் வசித்து வந்தவேளை எனது கணவர் கூலிவேலை செய்து கொண்டிருந்தார். 1990ஆம் ஆண்டு கூலிவேலைக்குச் சென்ற எனது கணவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. பின்னர் இராணுவத்தினர் எனது கணவரைக் கூட்டிக்கொண்டு சென்றுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்தது. எனது கணவன் பற்றிய தகவல்களை அறியத்தாருங்கள்.
எனக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள் பிள்ளைகளுடன் நான் அங்குமிங்குமாக அலைந்து கூலி வேலை செய்துதான் எனது 2 பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றேன். இந்நிலையில் எனது ஒரு
மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளேன் மற்றய மகளுக்கு 25 வயது அவருக்கும் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் ஆனால் வீடு இல்லாமல் இருக்கின்றேன்.
மிகவும் கஷ்ட்டத்தில் வாழ்ந்து வரும் எமக்கு யாரும் உதவுவதற்குக் கூட முன்வரவில்லை. எனது மகள் வாழைச்சேனையிலுள்ள கடை ஒன்றில் வேலை செய்கின்றார்.
அவருக்குக் கிடைக்கும் சிறிய வருமானத்தில் எமது குடும்பம் நகர்கின்றது. எனவே ஒரு வீடு வசதியாவது கிடைக்குமாக இருந்தால் எனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு வாய்ப்பாக அமையும். என மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேரந்த அனிஸ்ற்றா யோஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.