கனடாவின் மனிடோபா – நூனவுட் எல்லையின் தென் பிராந்தியத்திற்கு இன்று (திங்கட்கிழமை) பனிப்பொழிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், அப்பகுதியில் தெளிவற்ற வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த காலநிலை மாலை நேரத்திற்குள் சீராகும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திடீரென மாறும் மோசமான பயண நிலைமைகளை எதிர்கொள்ள எந்நேரத்திலும் தயாராக இருக்குமாறு சுற்றுலா கனடா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அவசார நிலையை எதிர்கொள்ளும் வகையில், குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள், முதலுதவி கருவிகள் மற்றும் பிரகாச ஒளி விளக்குகள் என்பவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு பொது பாதுகாப்பு கனடா அமைப்பு தெரிவித்துள்ளது.