மண்ணை கவ்விய அவுஸ்திரேலியா: 17 ஆண்டுகளுக்கு பின் வெற்றியை ருசித்த இலங்கை
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஹேரத் சுழலில் மிரட்ட, இலங்கை அணி 106 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
டெஸ்ட் அரங்கில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை 2வது முறையாக வெற்றியை ருசித்துள்ளது.
கடைசியாக 1999ம் ஆண்டு கண்டியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் பின் 17 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 27 டெஸ்டில் இலங்கை 2 போட்டியில் வெற்றியும், 17 போட்டியில் தோல்வியும், 8 போட்டியை டிராவும் செய்துள்ளது.
கடந்த ஆண்டு டெஸ்ட் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் மூலம் இலங்கையிடம் வீழ்ந்த 2வது டெஸ்ட் தலைவரானார் ஸ்மித். இதற்கு முன் ஸ்டீவ் வாக் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி (1999ம் ஆண்டு) இலங்கையிடம் தோற்றது.