பிரபல மலையாள இயக்குனர் கமல் டைரக்சனில் தற்போது ஹிந்தி மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஆமி’ என்கிற படத்தில் நடித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து எழுத்தாளராக உருவெடுத்து, 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் ‘ஆமி’ என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் கமல்
இந்தநிலையில் இந்தப்படத்தில் மாதவிக்குட்டியின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை இயக்குனர் கமல் சினிமாவுக்காக திரித்து மாற்றிவிட்டதாகவும், இந்தப்படம் லவ் ஜிஹாத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்தப்படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது..
“இந்தப்படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் நிறைய சர்ச்சைகள் வரும், ஆனால் அதை எதிர்நோக்க நான் தயாராக இருக்கிறேன்” என இயக்குனர் கமல் ஏற்கனவே கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.