கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட அரசியல் ஆட்சியாளர்களை முழுமையாக தோற்கடிக்க முடியாது போனதாக சிவில் அமைப்புகளின் செயற்பட்டாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் செயற்பாட்டு ரீதியான அரசியல் பாத்திரங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தற்போதைய அரசாங்கத்திற்குள்ளும் இருந்தமையே இந்த நிலைமைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலை ஏற்பட்டிருப்பது ஒரு அனர்த்தம் எனவும் சரத் விஜேசூரிய கூறியுள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், இங்கு கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், கடந்த கால வலிகளை பற்றி பேசி எதிர்காலத்தில் மீண்டும் வலியை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.