புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியைக் கைவிடுமாறு அரசுக்கு மகாநாயக்க தேரர்கள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அவர்களை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தீர்மானித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.
மகாநாயக்க தேரர்களை தனித்தனியே சந்தித்து, இலங்கைக்கு ஏன் புதிய அரசமைப்பு அவசியமாகின்றது என்ற முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவுள்ளனர்.
இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதே பன்னாட்டுச் சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதற்காகவே அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
மாறாக, பன்னாட்டுச் சூழ்ச்சிகளின் பிரகாரம் அரசமைப்பை தயாராக்குமாறு அழுத்தம் கொடுக்கவில்லை என்று மகாநாயக்க தேரரர்களுக்கு விளக்கமளிக்கப்படும்.
அப்போது பன்னாட்டுச் சமூகம் மீதான அச்சம் நீங்கக்கூடும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.