மகளை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ.37 லட்சம் சன்மானம்!
கனடா நாட்டில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு ரூ.37 லட்சம் சன்மானம் வழங்க தயார் என தாயார் கண்ணீருடன் அறிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள Saskatchewan மாகாணத்தில் Mekayla என்ற 17 வயது இளம்பெண் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானிய கொலம்பியாவிற்கு அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.
ஆனால், ஏப்ரல் 12-ம் திகதி இளம்பெண் திடீரென மாயமாக காணாமல் போயுள்ளார்.
பல நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானிய கொலம்பியாவிற்கு இரண்டாவது முறையாக திரும்பியுள்ள தாயார் நேற்று கண்ணீருடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நிச்சயமாக எனது மகள் ஏதோ ஒரு இடத்தில் உயிருடன் இருக்கிறார் என என் உள் மனது கூறுகிறது. அதே சமயம், அவர் ஆபத்திலும் இருப்பதாக நான் உணர்கிறேன்.
எனது மகளை பிரிந்து நாங்கள் அனைவரும் கடந்த 6 மாதங்களாக கடுமையான வேதனையை சந்தித்து வருகிறோம்.
எனது மகளை கண்டுபிடிக்க அனைவரும் முன்வர வேண்டும்.
மேலும், கடுமையான போராட்டத்திற்கு பிறகு இப்போது 25,000 டொலர்(37,00,250 இலங்கை ரூபாய்) நிதி வசூல் செய்துள்ளோம்.
என் மகளை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு இத்தொகையை சன்மானமாக அளிக்க தயார் என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இளம்பெண் காணாமல் போன நாள் முதல் பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.