போர்த்துகலில் புயல் வேகத்தில் வீடுகளை நோக்கி பரவும் காட்டுத்தீ
போர்த்துகல் நாட்டின் Funchal நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது, அருகில் இருக்கும் இருப்பிடங்களை நோக்கி புயல் வேகத்தில் பரவி வருவதால், Funchal நகரில் உள்ள சுமார் 400 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இங்கு 6 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீயினை அணைக்கும் பணியில் சுமார், 3,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், வடக்குபகுதியில் தான் அதிகமான தீ பரவி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் காடுகள் மற்றும் பைன் மரங்கள் நிறைந்த பகுதிகள், மழையின்மை காரணத்தால் மிகவும் வறட்சியடைந்து காணப்பட்டுள்ளது. இக்காரணத்தினாலேயே இங்கு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தீயினால் ஏற்பட்ட புகைமண்டலங்கள் வானத்தை நோக்கியும் எழும்பிய வண்ணம் உள்ளன, இந்த புகையின் தாக்கத்தால் உடல்நலரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.