போர்க்குற்ற விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவேண்டும்! மூன்
இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர்நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் மாலை 1.30 மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில்வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களை சந்தித்துகலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
மேலும் முதலமைச்சர் விடயம் தொடர்பாகதெரிவிக்கையில்,
நாங்கள் பேசும் போது 2009ம் ஆண்டுதாங்கள் வருகை தந்தபோது மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பானவிடயங்கள் பேசப்பட்டிருந்த போதும்.போர் குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றுஉருவாக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
இதற்கு அவர் பதிலளிக்கையில், போர்குற்ற விசாரணைஎன்பது மக்களால் அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக் கொள்ள கூடியதாகஇருக்கவேண்டும். அப்போதே மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.
எனவே அவ்வாறான ஒருவிசாரணை பொறிமுறையினை உருவாக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அந்த பொறிமுறை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதனை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகளை ஐ.நா நிச்சயமாகவழங்கும். என கூறியிருக்கின்றார்.
இதேபோல் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகநாங்கள் சுட்டிக்காட்டியபோது 2009ம் ஆண்டு தாம் இலங்கை வந்தபோது அதனை நீக்குவதற்குநடவடிக்கை எடுக்குமாறு கேட்டதாகவும், இதுவரை காலமும் அந்த சட்டம் நீக்கப்படாமலிருப்பதானது பிழை எனவும் அதனை நீக்கவேண்டும். எனவும் தாம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைகேட்டுள்ளதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில்தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். எனவும் தாம் கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதேபோல் நல்லிணக்கத்திற்காக பெருமளவு பணம் செலவிட உள்ளதாகவும் அதற்குபல நாடுகள் நிதி வழங்க உள்ளதாகவும் அறிகிறோம். ஆனால் சிறைகளில் உள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.காணாமல்போனவர்கள் விடயத்தில் உண்மைகள் கண்டறியப்படவில்லை. பெருமளவு படையினர்வடக்கில் நிலைகொண் டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்கிடக்கவில்லை. இவ்வாறான நிலையில் எப்படி நல்லிணக்கம் உண்டாக்க போகிறீர்கள்? எனதாம் கேள்வி எழுப்பியதாக முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.