போதை மயக்கத்தில் தாய்- தந்தை! குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்
அதிக அளவு போதை மருந்து சாப்பிட்டு இறந்த தாய், தந்தையால் அவர்கள் குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வருபவர் Jason E. Chambers (27) அவர் மனைவி Chelsea S. Cardaro (19) இவர்களுக்கு Summer என்ற ஐந்து மாத பெண் குழந்தை இருக்கிறாள்.
போதை பழக்கத்திற்கு அடிமையான Jasonம், அவர் மனைவி Chelseaம் அவர்கள் வீட்டை விட்டு ஒரு வாரம் வெளியில் வராமலே இருந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்து துற்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொலிசில் தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிசார் வந்து அங்கு பார்த்த போது Jason அவர் மனைவி Chelsea மற்றும் அவர்கள் குழந்தை Summer மூவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து பொலிசார் கூறுகையில், அவர்கள் இருவருக்கும் ஹெராயின் போதை பழக்கம் இருந்துள்ளது. அதிக அளவு ஹெராயின் உட்கொண்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அவர்கள் குழந்தை ஒரு வாரம் ஏதும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்ததாலும், நீர்போக்கு காரணமாகவும் இறந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.