போதையில் வாகனம் செலுத்தியவரை பிடிக்க போய் காயமடைந்த அதிகாரிகள்!
கனடா-போதையில் வாகனம் செலுத்திய சந்தேக நபர் சம்பந்தப்பட்ட மோதலில் ரொறொன்ரோ பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு 9மணிக்கு சிறிது பின்னராக மெல்வேர்ன், ஸ்காபுரோ பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
மோர்னிங்சைட் மற்றும் செப்பேர்ட் அவெனியு பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் வாகனம் ஒன்றை நிறுத்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் வேறொரு வாகனத்தில் வந்த ஆண் நபர் பொலிசாரின் வாகனத்தை பின்னால் இடித்து அவர்களின் வாகனத்தை பொலிசாரால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் தள்ளியுள்ளார்.
இதனால் அதிகாரி ஒருவருக்கு கையில் காயமேற்பட்டதுடன் மற்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.
பொலிசாரின் வாகனத்தை இடித்த ஆண் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக போதை பரிசோதனைக்காக பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.