போக்குவரத்து விதியை மீறிய 300 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன
நெரிசலான நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த 300 வாகனங்கள் கடந்த 4 நாட்களில் கைப்பற்றப்பட்டதாக ரொரண்டோ போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
ரொரண்டோ நகர மேயர் ஜோன் டொரியின் கட்டளைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நெரிசலான வீதிகளில், சாரதிகள் வீதி விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதில்லை என மேயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நடவடிக்கையின் போது Bloor St., Front St., Parliament St., and Dufferin St., ஆகிய வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 1,467 வாகனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டதுடன் 298 வாகங்கள் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போக்குவரத்து நடவடிக்கைகள் கடந்த 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான போக்குவரத்து சோதனை நடவடிக்கை இதுவாகும்.