பேஸ்புக்கின் புதிய அறிமுகம்: இது ஹேம் பிரியர்களுக்கானது!
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் ஆனது பல்வேறு சேவைகளையும் குறித்த தளத்தின் ஊடாக வழங்கிவருகின்றது.
இதில் பலரையும் ஈர்த்துள்ள ஒன்லைன் ஹேமும் அடங்கும்.
தற்போது இக் ஹேம் பிரியர்களை மேலும் கொள்ளை கொள்ளும் விதமாக Gameroom எனும் புதிய ஹேமிங் பிளாட்போர்மினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும் இப் புதிய ஹேமிங் பிளார்ட் போர்ம் டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணணிகளில் மட்டுமே செயற்படக்கூடியது.
இதன்படி விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு பின்னர் அறிமுகமான இயங்குதளங்களில் செயற்படும் கணணிகளில் புதிய பிளார்ட் போர்மினை பயன்படுத்த முடியும்.
மேலும் இப் பிளார்ட் போர்மினை உலகெங்கிலும் பரந்துள்ள 125 மில்லியனிற்கும் அதிகாமான ஹேம் பிரியர்களை பயன்படுத்த வைப்பது பேஸ்புக் நிறுவனத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.