பேர்லின் தாக்குதலை தொடர்ந்து ரொறொன்ரோ கிறிஸ்மஸ் சந்தை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டிஸ்ரிலரி டிஸ்ரிக்கில் அமைந்துள்ள ரொறொன்ரோ கிறிஸ்மஸ் சந்தையின் பாதுகாப்பு பேர்லின் தாக்குதலை தொடர்ந்து பலப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு பேர்லின் டவுன்ரவுனில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் சந்தைக்குள் டிரக் ஒன்று மோதியதில் 12-பேர்கள் கொல்லப்பட்டதுடன் கிட்டத்தட்ட 50-பேர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து சந்தை அமைப்பாளர்கள் பொலிசாருடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
இதன் பயனாக சந்தையின் எல்லைகளை சுற்றி கான்கரிட் தடுப்புக்கள் போடப்பட்டதுடன் மேலதிக ஊதியத்துடன்-கடமை புரியும் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
51வது டிவிசன் மேலதிக சீருடை பொலிஸ் அதிகாரிகளை தெருவில் ரோந்து சேவைக்கு அமர்த்தியுள்ளது.
அத்துடன் சமூக பதில் அதிகாரிகள் வீதிகளில் நடந்து சென்று ஏதேனும் சந்தேகத்திற்குரியன இடம்பெறுகின்றதா என கண்காணிப்பர் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.