பேரூந்து ஆற்றில் விழுந்ததில் 25 பேர் உயிரிழப்பு: 20 பேர் காயம்
நேபாளத்தில் சாண்டிபான்ஜ்யாங் பகுதியில் பயணிகள் பேரூந்தொன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் காயமடைதுள்ள நிலையில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய நேபாளத்தின் கவுர் நகரில் இருந்து சுற்றுலாத்தலமான போக்ஹாரா நகருக்கு நேற்று (வெள்ளிக்கிழரைம) 45 பேருடன் பயணித்த குறித்த பேரூந்து சாண்டிபான்ஜ்யாங் பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த ஆற்றில் விழுந்துள்ளது.
பேரூந்து சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று ஆற்றில் விழுந்துள்ளது. இதன்போது அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கி பயலியாகியுள்ளனர். ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
குறித்த பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.