பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய சமய நடவடிக்கைகள் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் வெவ்வேறு தரப்பினரை தொடர்பு கொண்டு கலந்துரையாடும் பொதுபல சேனாவின் நடவடிக்கையில் ஓர் அங்கமாகவே குறித்த சந்திப்பு இடம்பற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.