பேரழிவு பகுதியாக லூசியானா பிரகடனம் : உயிரிழப்புக்கள் 5 ஆக அதிகரிப்பு
இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா லூசியானா மாநிலத்தை பேரழிவுப் பகுதியாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், மாநிலத்தில் விரைவாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
லூசியானாவின் பல பிராந்தியங்களிலும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக படையினர் மற்றும் அவசரகால பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் இன்னும் பலர் வெளியேறமுடியாமல் தம் வீடுகளுக்குள் சிக்குண்டிருக்கலாம் எனவும், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் துரித கதியில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இதேவேளை லூசியானாவின் அண்டை மாநிலங்களான அலபாமா மற்றம் மிசிசிப்பி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.