மெட்ரிக் டொன் 40000 எரிபொருளை ஏற்றிய “லேடி நெவரஸ்கா” கப்பல் இன்று (08) இரவு 11.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது அந்தக் கப்பல் கோசின் மற்றும் பெங்களுர் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த கப்பல் வந்தடைந்ததும் நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் நெருக்கடியை முற்றாக இல்லாமலாக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.