பெர்லினை தொடர்ந்து பிரான்ஸ் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மர்ம வாகனம்: அச்சத்தில் உறைந்த மக்கள்
பெர்லின் தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸில் தீவிரவாத அச்சம் காரணமாக கிறிஸ்துமஸ் மார்க்கெட் காலி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது
மெட்ஸ், Republic Square பகுதயில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட்டே இவ்வாறு காலி செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டருடன் மர்ம கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
தகவலறிந்தவுடன் அப்பகுதிக்கு விரைந்த 30 பொலிசார், மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றி கிறிஸ்துமஸ் மார்க்கெட்டை காலி செய்துள்ளனர்.
பின்னர், காரிலிருந்த எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து காரின் உரிமையாளர் அப்பகுதிக்கு அருகே கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரிலின் கிறிஸ்துமஸ் சந்தையில் ஐ.எஸ் குழுவினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.