பெரு நாட்டில் ஏற்பட்ட பஸ் விபத்தில், 48 பேர் பலியாகினர்.தென் அமெரிக்க நாடான, பெருவின் ஹுவாசோ நகரிலிருந்து, லிம்பா நோக்கி சென்ற பயணியர் பஸ், திடீரென விபத்துக்கு உள்ளானது.
பஸ்சில், 55 பேர் பயணித்த நிலையில், கடற்கரையை ஒட்டிய மலைப்பாதையில் சென்ற பஸ், திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில், பயணியர், 48 பேர் பலியாகினர்.கடற்கரை பகுதியில் பஸ் கவிழ்ந்ததால், அப்பகுதியில் ஏற்பட்ட அலைகளால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
எனினும், ஹெலிகாப்டர் உதவியுடன், படுகாயமடைந்தோர் மீட்கப்பட்டனர்.இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடக்கிறது. காயமடைந்த அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.