பெருந்தொகை மோசடி செய்த 30 வயது பெண் சிக்கினார்
தமது விசாரணைகளுக்கு அமைவாக 1.9 மில்லியன் டொலர் மோசடித் திட்டத்தின் கீழ் பெண்ணொருவரைக் கைது செய்திருப்பதாக ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 வயதான Gwendolyne Martinez Rodriguez என்ற பெண்மணியே நேற்று (திங்கட்கிழமை) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜி.எம்.ஆர் என்ற கம்பனியின் இயக்குனராக இருக்கும் குறித்த பெண்மணி, தனது பெயரிலும் கம்பனியின் பெயரிலும் பல மில்லியன் காசோலை மோசடி செய்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து 1.9 மில்லியன் டொலர்கள் மோசடி செய்திருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். எனவே, குறித்த கம்பனியின் தற்போதைய மற்றும் முன்னைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களை சரிசெய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கம்பனியால் பாதிக்கப்பட்ட யாராவது இருந்து இருந்தால், தமது குற்றவியல் பகுதிக்கு அழைப்பு மூலம் தெரியப்படுத்துமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.