பூமியை நெருங்கும் லண்டனை விட மிகப்பெரிய விண்கற்கள்
பாரிய அளவிலான 4 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் பயணிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த நான்கு விண்கற்களில் மிகப்பெரிய விண்கல் 853 அடியை கொண்டிருப்பதாகவும், அது கிட்டத்தட்ட லண்டன் ஐ போன்று இரண்டு மடங்காக காணப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
வினாடிக்கு 8 மைல் வேகத்தில் அது பறக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விண்கற்களில் பூமிக்கு அருகில் வரும் விண்கல்லிற்கு 2006LH என பெயரிடப்பட்டுள்ளது. அது 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு நெருங்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
ஏனைய விண்கற்களுக்கு 2010XN, 2015YQ1, மற்றும் அந்த நான்கில் மிகப்பெரிய விணக்கல்லிற்கு 2006XD2 என பெயரிடப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் 2006XD2 விண்கல் பூமியில் மோதினால் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய 3 விண்கற்கள் அதனை விடவும் குறைவான அளவை கொண்டுள்ள நிலையில் அது பூமியில் மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால் பூமியில் உள்ளவர்கள் தப்பித்ததாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும், ஒரு டஸன் கணக்கிலான விண்கற்கள் பூமியில் இருந்து 5.6 மில்லியன் மைல் தூரத்தில் (7.5 மில்லியன் கிலோமீற்றர்) உள்ள கண்காணிப்பு எல்லைக்குள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நான்கு விண்கற்களும் ஒரே நாளில் பூமிக்கு வருவது சாதாரணமான ஒரு செயல் அல்ல என குறிப்பிடப்படுகின்றது.
இது மிகவும் அரிதான விடயமாக உள்ளதெனவும், இதற்கு முன்னர் இவ்வாறான ஒன்றை பார்த்ததில்லை என Koschny ஆய்வாளர் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.