பூமியில் விழுந்த பாரிய விண்கல்
பிரபஞ்சத்தின் பால்வெளியில் கோள்களுக்கு மத்தியில் விண்கற்கள் அங்குமிங்கும் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவற்றில் சில கற்கள் பூமியிலும் ஏனைய கிரகங்களிலும் விழுவதுண்டு.
அப்படி விழும் விண்கற்கள் எரிந்து சம்பலாகி விடுவதுண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய விண்கற்கள் பூமியில் விழுந்துள்ளன.
இதனால் பூமி பரப்பில் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்கள் அழிந்து போயின.
இந்த நிலையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்த மிகப் பெரிய விண்கல் ஆர்ஜன்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய விண்கல் இதுவாகும்.
30 டொன் எடை கொண்ட இந்த விண்கல் மண்ணில் புதையுண்டு காணப்பட்டது. இயந்திரம் ஒன்றின் உதவியுடன் விண்கல் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இந்த விண்கல் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்திருக்கலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.