புலிகளின் முக்கிய பகுதி என்பதால் இராணுவம் வெளியேற மறுக்கிறதா?
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதி மக்களின் காணி விடுவிப்பு குறித்து காலத்திற்கு காலம் பல அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் வழங்குகின்றனர்.
எனினும், காணி விடுவிப்பு தொடர்பில் அப்பகுதி மக்களின் போராட்டம் இன்று வரையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
நாட்டின், ஆட்சிப் பீடத்தை அலங்கரித்த ஆட்சியாளர்களினால், அகதி வாழ்வுக்கு விடுதலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் இன்றும் அவர்களின் வாழ்வு தொடர் கதையாகவே உள்ளது.
பரவிபாஞ்சன் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் சொர்க்காபுரி, அவர்களின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளின் கேந்திர நிலையம்.
பசுமை நிறைந்த நிலப்பரப்பாக காட்சியளித்த பரவிப்பாஞ்சன் பகுதி, தலைநகர் கொழும்புக்கு இணையாக செயற்பட்ட வடபகுதி நகரமாகும். தற்போது அதன் நிலைப்பாடு என்ன?