புத்தளம் பகுதி கிணற்றலிருந்து மனித எச்சங்கள்
புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து மனித எச்சங்கள் சில நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அவசரப்பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கமைய இவை மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாழடைந்த கிணறானது புத்தளம் ஹொல்சீம் சீமெந்து நிறுவனத்திற்கு அருகில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் குறித்த எச்சங்கள் பலவருடங்களுக்கு முன்பு பழமையானது என்றும் தெரிவித்துள்ள பொலிஸார், வேறு ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருந்த இந்த சடலம் தோண்டப்பட்டு குறித்த கிணற்றில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.